கம்பஹா வெயாங்கொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நய்வல பிரதேசத்தில் வீடொன்றில் சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை எரிபொருளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்
நய்வல, எஸ்ஸெல்ல பிரதேசத்தை சேர்நத 58 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 71 லீற்றர் டீசல், 105 லீற்றர் பெற்றோல் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்