வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில், சிறைக்காவலர் மீது தாக்குதல்

0
162

கொழும்பு வெலிக்கடை விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், சிறைக்காவலர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம், இன்று பதிவான நிலையில், சிறைக்காவலருக்கு, வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதனால், சிறைச்சாலை பொறுப்பதிகாரியின் ஆலோசனையின் பேரில், அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.