வெல்லம்பிட்டி, சாலமுல்ல வீடமைப்புத் திட்டத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று வெள்ளிக்கிழமை (22) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்துக்கு விரைவில் தீர்வு பெற்று தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் குடியிருப்பு அருகே போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதன்போது, தற்போதைய அரசாங்கத்திற்கு சிரமங்களை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்றே தீ வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்களில் சிலர் தெரிவித்துள்ளனர்.
தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.