வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவில் துப்பாக்கி சூடு!

0
200

வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டுவில பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நபரொருவர் காயமடைந்துள்ளார்.

நேற்று இரவு இடம்பெற்ற குறித்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ரி-56 ரக துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் இதனைத் திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.