மொனராகலை மாவட்டம் வெல்லவாயவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு வரிசையில் நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஒருவர் 4 பேரை கத்தியால் குத்தியதில் நான்கு பேரும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த நால்வரும் வெல்லவாய ஆதார வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபரொருவர் மொனராகலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தாக்குதல் நடத்திய நபர் தப்பிச் சென்றுள்ள நிலையில், வெல்லவாய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.