30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

வெளிநாடுகளுக்குச் செல்லும் அரச ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பு

அரச ஊழியர்கள் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் சென்ற பின்னர், ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்களவு அமெரிக்க டொலர் தொகையை இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தொழில் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு செல்லும் அரச ஊழியர்கள் ஆரம்ப நிலை ஊழியர்கள் 100 அமெரிக்க டொலர்களும், இரண்டாம் நிலை ஊழியர்கள் 200 அமெரிக்க டொலர்களும், மூன்றாம் நிலை ஊழியர்கள் 300 அமெரிக்க டொலர்களும், உயர் மட்ட அதிகாரிகள் 500 அமெரிக்க டொலர்களும் மாதந்தம் இலங்கைக்கு அனுப்புவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்தவர்கள் இலங்கையிலுள்ள வங்கிக் கட்டமைப்பு ஊடாக தமது பெயரில் உள்ள வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கு பணத்தை அனுப்ப வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச ஊழியர்கள் தங்களது சிரேஷ்டத்துவத்துவத்திற்கு பாதிப்பு ஏற்படாதவாறு சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாடுகளில் தொழிலை மேற்கொள்ளலாம் எனவும் சம்பளமற்ற விடுமுறை காலம் நிறைவடைந்ததை அடுத்து மீண்டும் அரச சேவையில் இணைந்து கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles