வெளிநாட்டுத்தயாரிப்பு சிகரெட்களுடன் ஒருவர் கைது! செய்யப்பட்டுள்ளார்.

0
43

கொழும்பு துறைமுக நகர நுழைவாயில் பாகுதியில் வெளிநாட்டுத்தயாரிப்பு சிகரெட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளதுடன், பொலிசார் , குற்றப்புலனாய்வு பிரிவினர் மற்றும் கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன் போது சந்தேக நபரிடமிருந்து 1400 வெளிநாட்டுத்தயாரிப்பு சிகரெட்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேச நபர் 53 வயதுடைய மாதலே பிரதேசத்தை சேர்ந்தவர் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. சந்தேக நபர் குறித்த விசாரணைகளை கொழும்பு கரையோர பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.