கம்பஹா மாவட்டத்தின் இருவேறு பிரதேசங்களில் இருவர் வெளிநாட்டு துப்பாக்கி, வெளிநாட்டு கைக்குண்டு என்பவற்றுடன் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக கம்பஹா நகரில், கம்பஹா குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்படும் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாகோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை மாலபே பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மாலபே பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைக்குண்டுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாலபே பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.