கடந்த ஆண்டு சிறிய பட்ஜெட்டில் தயாராகி அதிக வசூல் குவித்து திரையுலகினரையும் ரசிகர்களையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்த காந்தாரா படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ‘காந்தாரா’ டப்பிங் செய்து வெளியிடப்பட்டு வசூலை ஈட்டியது.
8 கோடி இந்திய ரூபா செலவில் தயாரான இத்திரைப்படம் 400 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் வசூலை குவித்தது. இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்திருந்தார். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சீக்வலாக இல்லாமல், ப்ரீக்வலாக உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் தெரிவித்திருந்தநிலையில், காந்தாரா இரண்டாம் பாகத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இன்று நண்பகல் 12.25 மணிக்கு வெளியாகியுள்ளது.