ஐக்கிய நாடுகள் சபையின் 77ஆவது பொதுச்சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி நாளை நியூயோர்க் செல்லவுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதி ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை அமர்வில் வெளிவிவகார அமைச்சர் உரையாற்றவுள்ளார். கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமான பொதுச்சபையின் 77 ஆவது அமர்வு செப்ரெம்பர் 27 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் ஜனாதிபதி பங்கேற்கமாட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.