நட்டிற்குள் உள்நுழையும், வெளிச்செல்லும் பயணிகளிடம் பணம் வசூலிக்கும் மோசடி: அரசு எச்சரிக்கை

0
192

இலங்கைக்கோ அல்லது இலங்கையிலிருந்து வேறு எந்த மூன்றாம் நாட்டிற்கோ செல்வதற்கு கட்டணம் வசூலிக்கும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று இலங்கை வெளி விவகார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சம்பந்தப்பட்ட அரசு நிறுவனங்களைத் தவிர இலங்கைக்குள் நுழைவதற்கோ அல்லது வெளியேறி வேறு எந்த நாடுகளுக்கோ செல்ல எந்தவொரு நபருக்கும் நிறுவனத்திற்கும் இலங்கை அரசு அனுமதி வழங்கவில்லை.

நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள திருப்பி அனுப்பும் பணி, வரும் வாரங்களில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது.

வெளிநாட்டில் வசிப்பவர்கள் பற்றிய மேலதிக மற்றும் உண்மை தகவல்களுக்கு உங்கள் அருகிலுள்ள இலங்கை தூதரகம் அல்லது இலங்கை உயர் ஸ்தானிகராலயம் அல்லது துணைத் தூதரகத்தை தொடர்பு கொள்ளவும்.

அல்லது, உங்கள் கேள்விகள் குறித்து www.contactsrilanka.mfa.gov.lk  என்ற இணையதளத்தில் குறிப்பிடுமாறு வெளிவிவகார அமைச்சகம் கோரியுள்ளது.