நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 4,800 ஏக்கர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக 2,000 மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் சுமார் 3,900 ஏக்கருக்கும் அதிக விவசாய நிலப்பரப்புகளுக்குப் பாதிப்பு ஏற்படக் கூடிய சாத்தியம் நிலவுகிறது.குறித்த விவசாய நிலங்களும் பாதிக்கப்பட்டால்இ சுமார் 3,200க்கும் அதிகமான விவசாயிகளும் பாதிப்பை எதிர்கொள்ள நேரிடும்.
அத்துடன் சிறிய அளவிலான விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.