வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, அரசாங்கம் உதவிகளை வழங்கவில்லை- கோடீஸ்வரன் எம்.பி குற்றச்சாட்டு

0
59

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேசத்தில், வெள்ள அனர்த்த்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நேரில் சென்று பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
கவீந்திரன் கோடீஸ்வரன், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான உணவுகளையும் வழங்கினார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்ற பாராளுமன்ற உறுப்பினர், அப்பகுதிகளின் வெள்ள நிலைமைகளை பார்வையிட்டதுடன்
மக்களுடனும் கலந்துரையாடினார்.

பொத்துவில் தொடக்கம் பெரியநீலாவனை வரை கனமழையினால் பல இடங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கான நிவாரண நடவடிக்கைகள்
எதனையும் அரசாங்கம் இதுவரையில் முன்னெடுக்கவில்லையென பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் குற்றம்சுமத்தியுள்ளார்.