வே.இராதாகிருஷ்ணன் கௌரவிப்பு!

0
66

நுவரெலியா சீதா எலிய சீதையம்மன் ஆலயத்தில், சிறப்பு பூஜைகளில் ஈடுபட்ட இந்திய மலேசிய நடன கலைஞர்கள், ஆலய தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணனை கௌரவித்துள்ளனர்.

ஆலய பணிகள் மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுகள், பட்டாபிஷேக நிகழ்வுகள், சிறப்பாக இடம்பெற்றமைக்காக, பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன், பாராட்டு பத்திரம் மற்றும் நினைவு சின்னத்தையும் வழங்கி வைத்தனர்.

நேற்று இடம்பெற்ற நிகழ்வில், மலையக தொழிலாளர் முன்னணியின் நிர்வாக செயலாளர் தமிழ்மாறன் ஜனார்த்தனன் பங்கேற்றார்.