வே.நவரத்தினத்தின் உடலுக்கு, தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி அஞ்சலி

0
77

விபத்தில் உயிரிழந்த, பருத்தித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் வேலுப்பிள்ளை நவரத்தினத்தின் உடலுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ.சுமந்திரன் தமிழரசு கட்சியின் கொடி போர்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

குறித்த இறுதி நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், பருத்தித்துறை நகரசபை முன்னாள் தவிசாளர் இருதயராசா, உட்பட முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், அரசியல் பிரதிநிதிகள், பிரதேச மக்கள் என பலர் கலந்து கொண்டதுடன் அஞ்சலி உரைகளும் நிகழ்த்தப்பட்டன.