வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட சகல அரச கட்டடங்களிலும் சூரியக்கல தொகுதிகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.
தேசிய சபை மீதான பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு, பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும முன்வைத்த கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளாhர்.
பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல உள்ளிட்ட உறுப்பினர்கள் இந்த கேள்வியினை முன்வைத்தமைக்கு எனது பதிலினை முன்வைக்க வேண்டியது அவசியமாகும்.
உண்மையில் வைத்தியசாலைகள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட சகல அரச கட்டடங்களிலும் சூரியக்கல தொகுதிகள் அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இவ்விடயம் தொடர்பாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஏற்கனவே என்னுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் பல பாடசாலைகளில் சூரியக்கல தொகுதிகள் அமைக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனால் தேசிய மின்கட்டமைப்பின் காணப்படுகின்ற மின் சுமை பெருமளவில் குறைக்கப்படும். எனவே இவ்விடயத்தில் நாம் அதிக கவனமெடுத்து வருகின்றோம்.
அத்துடன் பாராளுமன்றத்திலும் மாதாந்தம் பாரியளவிலான மின்கட்டணம் செலுத்தப்படுகின்றது. உனவே இந்தச் செலவினத்தினைக் குறைப்பதற்கு பாராளுமன்றத்திலும் சூரியக்கல தொகுதிகளைப் பொருத்துவதற்கு நாம் முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம்.
கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்னுற்பத்தி வேலைத்திட்டமானது அரச நிறுவனங்கள் பலவற்றில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சை எடுத்துக்கொண்டால் சுகாதார அமைச்சின் தலைமையில் இலங்கையிலுள்ள சகல வைத்தியசாலைகளிலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டு விட்டன.
இத்துடன் மதவழிபாட்டுத் தலங்களிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
இவ்வருட இறுதிக்குள் அந்தப் பணிகளை நிறைவு செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
கல்வி அமைச்சை எடுத்துக்கொண்டால் கல்வி அமைச்சின் கீழுள்ள சகல அரச பாடசாலைகளிலும் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்து தேசிய மின்னுற்பத்தியிலுள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.
பாராளுமன்றத்திலும் மாதாந்தம் 60 இலட்சம் மின்கட்டணத்தை செலுத்துவதாக கூறப்படுகின்றது. எனவே இந்த செலவீனத்தை குறைப்பதற்கு பாராளுமன்றத்திலும் சோலர் மின்னுற்பத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்துவது பொறுத்தமாக இருக்கும்.
மின்கட்டண அதிகரிப்பினால் சகல தரப்பினரும் சவால்களுக்கு முகங்கொடுத்து இருக்கின்றனர்.