இலங்கை்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அநுராதபுரத்தில் உள்ள ஜய ஶ்ரீ மகா போதியில் ஜனாதிபதி திசாநாயக்க அவர்களுடன் இணைந்து வழிபாடுகளை மேற்கொண்டிருந்தார்.
“பௌத்தமதத்தின் அதி சிறப்புமிக்கதும் மதிப்புக்குரியதுமான ஸ்தலங்களில் ஒன்றான இத்தலத்தில் வழிபாட்டினை மேற்கொள்வது உண்மையில் மிகவும் பணிவுக்குரிய தருணமாகும். அமைதி, ஞானம் மற்றும் ஆன்மீக நீட்சியின் வாழும் குறியீடாக இத்தலம் திகழ்கின்றது. புத்தபெருமானின் போதனைகள் எப்போதும் எமக்கு வழிகாட்டட்டும்” என்று தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

