ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையில் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா!

0
88

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்களால் அமோக வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 3ஆவது தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

ஐ.பி.எல் இறுதி ஆட்டம் ஒன்றில் 114 ஓட்டங்கள் என்ற மிகக் குறைந்த வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 10.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று வெற்றியிட்டியது.