ஸெலன்ஸ்கி மீது ட்ரம்ப் மீண்டும் குற்றச்சாட்டு

0
8

ரஷ்ய – உக்ரைன் போர் விரிவடைந்ததற்கு உக்ரைன் ஜனாதிபதி வொலோதிமீா் ஸெலன்ஸ்கியே காரணம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளார்.மேலும், உக்ரைனைவிட 20 மடங்கு பெரிய நாடான ரஷ்யா மீது போர்புரிந்து வெற்றி பெறுவதற்குப் பிற நாடுகள் ஏவுகணைகளை வழங்கிக் கொண்டே இருக்கும் என எண்ணக் கூடாது எனவும் அவா் தெரிவித்தார்.

இதேவேளை ரஷ்யாவுக்கு எதிரான போரில் அதிகமாக ஏவுகணைகளை வாங்க உக்ரைன் முனைப்புக் காட்டி வருவது குறித்து ட்ரம்ப்பிடம் செய்தியாளா்கள்நேற்று முன்தினம் (14) கேள்வியெழுப்பினா்.அதற்கு பதிலளித்த அவா், ‘எப்போதும் ஏவுகணைகளை வாங்க வேண்டுமென்றே ஸெலன்ஸ்கி நினைக்கிறார். தங்கள் நாட்டைவிட 20 மடங்கு பெரிய நாட்டுடன் போர் புரிந்தால் பிற நாடுகள் ஏவுகணைகள் வழங்கிக்கொண்டே இருக்கும் என அவா் நினைப்பது தவறு.

ரஷ்ய-உக்ரைன் போரில் இலட்சக்கணக்கானோர் உயிரிழந்ததற்கு ரஷ்ய ஜனாதிபதி புடின், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஸெலன்ஸ்கி ஆகிய மூன்று பேருமே முக்கிய காரணம்’ என்றார்.