ஸ்பெயினின் தொழிலாளர் அமைச்சர் யோலண்டா டயஸ் Yolanda Diaz, ஐரோப்பிய தேர்தல்களில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்பெயினின் பொதுத் தேர்தலின் போது தீவிர வலதுசாரிகள் சார்பாக போட்டியிட்ட யோலண்டா டயஸ், மூன்று இடங்களை மட்டுமே வென்றார்.
இதன் விளைவாக, சுமர் ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலக டயஸ் முடிவு செய்துள்ளார். எனினும் புதியவர் நியமிக்கப்படும்வரை தன் பணிகளை தொடரவுள்ளதாக அறிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மக்கள் வாக்களிக்கும்போது தவறு செய்ய மாட்டார்கள் – வாக்களிக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் அவர்கள் தவறு செய்ய மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்.