ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸிற்கு கொரோனாத் தொற்று!

0
139

ஸ்பெயின் நாட்டு பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸிற்கு நேற்றைய தினம் கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அறியப்படுத்தியுள்ளார். மேலும், அதிகபட்ச முன்னெச்சரிக்கையுடன் தொடர்ந்து பணியாற்றப்போவதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்பெய்னில் 60 வயதைக் கடந்தவர்களுக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கும் இன்று கொரோனாத் தடுப்பூசியின் 4வது டோஸ் ஏற்றும் பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் அந்நாட்டுப் பிரதமர் கொரோனாத் தொற்றிற்குள்ளாகியுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்திலிருந்து நாடு திரும்பிய இரு நாட்களில் அவருக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டின் அனைத்து அரசாங்க நிகழ்வுகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.