ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் ‘கலியுகம்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

0
160

‘விக்ரம் வேதா’ புகழ் நடிகை ஸ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘கலியுகம்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, ‘மக்கள் செல்வி’ ஐஸ்வர்யா ராஜேஷ், ‘இளம் இசைப்புயல்’ அனிருத் ஆகியோர் இணைந்து அவர்களது இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

அறிமுக இயக்குநர் பிரமோத் சங்கர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் ‘கலியுகம்’. இதில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், கிஷோர், இனியன் சுப்ரமணி, சந்தோஷ், மணி, ஆர்ய லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே. ராம்சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு டான் வின்சென்ட் இசையமைத்திருக்கிறார்.

போஸ்ட் அபோகோலிப்டோ ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஆர்கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் கே. எஸ். ராமகிருஷ்ணா மற்றும் கே. ராம்சரண் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இதன் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 2064 ஆம் ஆண்டில் கதை நிகழ்வது போன்றும், அந்தக் காலகட்டத்தில் பசியும், வறுமையும் ஆட்சி செய்யும் என்றும், அதன்போது உணவு சேகரிக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கும் ஒரு இடத்தை பற்றிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் ரசிகர்களிடத்தில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது.