ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் பதவியில் இருந்தும், உச்ச பீட உறுப்புரிமையிலிருந்தும் அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுடைய அறிவுறுத்தலுக்கு அமைவாக, கட்சியின் செயலாளர் நிஸாம் காரியப்பரால், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு, இது தொடர்பில் இன்று கடிதமொன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ள நிலையில், கட்சித் தீர்மானத்துக்கமைய எச்.எம்.எம். ஹரீஸ் செயற்படாமையே, அவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்படுவதற்கு
காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.