ஸ்லோவாக்கியாவில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 7 பேர் பலி!

0
77

ஸ்லோவாக்கியா நாட்டில், புகையிரதத்துடன் பேருந்து மோதி விபத்திற்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் பிரட்டிஸ்லாவாவில் இருந்து, 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நோவ் சாம்கி நகரில், இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் பலர் காயமடைந்த நிலையில், சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், பேருந்தில் 9 பேரும், புகையிரதத்தில் 200 பேர் வரையிலும் பயணித்த நிலையில், பேருந்தில் பயணித்த 7 பேர் உயிரிழந்துள்ளனர்.