ஸ்விப்ட்’ பரிவர்த்தனை சேவையில் ரஷ்யாவுக்கு கட்டுப்பாடு விதிக்க ஜெர்மனி ஆதரவு

0
122

ஸ்விப்ட் எனப்படும் நாடுகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை சேவையில் ரஷ்யாவுக்கு குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிக்க ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
“ஸ்விஃப்ட்டின் குறிவைக்கப்பட்ட செயல்பாட்டுக் கட்டுப்பாடு அவசியம்” என்று ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் மற்றும் பொருளாதார அமைச்சர் ராபர்ட் ஹேபெக் ஆகியோர் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.
“சரியான நபர்களை மட்டும் பாதிக்கும் வகையில்” இந்தக் கட்டுப்பாடுகளை எப்படி அமல்படுத்துவது என்பதில் அரசு செயல்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி மற்றும் ஹங்கேரி நாடுகள் ஏற்கெனவே இது தொடர்பான ஆதரவை தெரிவித்துவிட்டனர். இத்தகைய தடைக்கு ஜெர்மனி இதுவரை எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.