ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு – சந்தேகநபரின் உந்துருளி மீட்பு!

0
96

ஹங்வெல்லை பகுதியில், உணவக உரிமையாளர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்காக பிரவேசித்த உந்துருளி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஹங்வெல்லை – பஹத்கம பகுதியில் உள்ள குறுக்கு வீதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் குறித்த உந்துருளி மீட்கப்பட்டது. குறித்த உந்துருளின் அடிச்சட்ட இலக்கம் மற்றும் இயந்திர இலக்கம் என்பன அழிக்கப்பட்டுள்ளமை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச்சூடு நடத்திக் கொல்லப்பட்டவர் ஹங்வெல்லை பொலிஸ் பொது பாதுகாப்பு குழு அங்கத்தவராவார். சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.