அவிஸ்ஸாவளை ஹங்வெல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வக்ஓயாவில் மூழ்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹங்வெல்ல, உடஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயது பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரு பெண்கள் இணைந்து குறித்த வாவியில் நீராடிக்கொண்டிருந்த நிலையில் நீரில் மூழ்கியுள்ளனர் என்றும் பிரதேசவாசிகளின் உதவியுடன் அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அவிஸ்ஸாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனைக்காக பெண்ணின் சடலம் அவிஸ்ஸாவளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.