இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை நிறுத்துவோமென அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில்,”ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிடவும் தயார்” என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாஹு தெரிவித்துள்ளார்.
”தெற்கு காஸாவின் ரஃபா நகரில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கினால், இஸ்ரேலுக்கு ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் வழங்குவதை நிறுத்துவோம்” என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடா்பில் கருத்து வெளியிட்டுள்ள இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாஹு
”ஹமாஸுக்கு எதிரான போரில் தனித்து நின்று போரிட வேண்டிய சூழல் உருவானால், தனித்து நிற்கவும் தயார். விரல் நகங்களால்கூட நாங்கள் போரிடுவோம். ஆனால், விரல் நகங்களைவிட பலமான ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன”- என்றார்.
அதேபோல், ரஃபா தாக்குதலுக்குப் போதுமான ஆயுதங்கள் தங்கள் வசமிருப்பதாக இஸ்ரேல் இராணுவச் செய்தித் தொடா்பாளா் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.