“இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த யோசனையில் எந்த வகையான அழுத்தம் வந்தாலும் இந்த ஒப்பந்தத்தை ஆதரிக்குமாறு இஸ்ரேலை அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.
அதே போன்று 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 7ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தாக்குதலை போன்று மீண்டும் தாக்குதல் நடத்தும் நிலையில் ஹமாஸ் அமைப்பு இனி இல்லை என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது.
இந்த அறிவிப்பின் ஊடாக இஸ்ரேலியர்களுக்கு வொஷிங்டனின் பார்வையில் போரின் நோக்கம் நிறைவேற்றப்பட்டதற்கான சமிக்ஞை வெளிப்படுகிறது”