இஸ்ரேல் – ஹமாஸ் போரில் 20,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். உடனடியாக போர் நிறுத்தம் செய்யுமாறு உலகநாடுகளின் வலியுறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், ஹமாஸ் அமைப்பினரின் முக்கியமான மையத்தைக் கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இந்தக் கட்டளை மையத்தைக் கண்டுபிடித்தது, ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் முக்கியமான கட்டமென இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஆயுதங்கள் மற்றும் இராணுவப் பொருள்களைக் கடத்துவதற்கு பயன்படுத்தும் சுரங்கப்பாதைகளின் மையமாக இது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.