ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவரானார் யேஹ்யா சின்வர்

0
95

ஹமாஸ் அமைப்பின் புதிய தலைவராக யேஹ்யா சின்வர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக ஹமாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

கடந்த வாரம் ஈரானில் வைத்து ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் இஸ்மாயில் ஹனீயே, இஸ்ரேலின் வான் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

இந்நிலையில், ஹமாஸ் அரசியல் பிரிவின் புதிய தலைவராக யேஹ்யா சின்வா் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பொதுவெளிகளில் அதிகம் தோன்றாவிட்டாலும் ஹமாஸ் அமைப்பின் நிர்வாகத்தின் மீது தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருபவராக இவர் அறியப்படுகிறார்.