ஹமாஸ் தரப்பினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 6 பணயக்கைதிகள் விடுவிக்கபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பணயக்கைதிகளில் நால்வர் இஸ்ரேல் மீதான தாக்குதலின்போது ஹமாஸ் துப்பாகிதாரிகளால் கைது செய்யப்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனைய இருவரும் ஒரு வருடத்துக்கு முன்பாக காசாவிற்குள் நுழைந்ததிலிருந்து ஹமாஸால் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலாக இஸ்ரேல் தனது சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 602 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டத்தில் விடுவிக்கப்பட்டிருந்த 33 பேர் கொண்ட குழுவில் உயிருடன் உள்ள 6 பணயக்கைதிகளே இன்றையதினம் ஒப்படைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன