இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன.பெரும்பாலான அரபு நாடுகள் ஹமாஸ் போராளிகளை ஆதரிக்கின்றன.
ஹமாஸ் போராளிகளை ஆதரிக்கும் வெளிநாட்டு அமைப்புகளுக்கும், அரசாங்கங்களுக்கும் எதிராக அமெரிக்க பாராளுமன்றம் கடந்த வாரம் தீர்மானம் இயற்றியது.
இந்நிலையில், இது குறித்து மலேசிய பாராளுமன்றத்தில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் கருத்து தெரிவிக்கையில்,
‘மலேசிய மக்கள் ஹமாஸ் போராளிகளுக்கு ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். இனவெறியை எதிர்த்து ஆப்பிரிக்க மக்களுக்காக போராடிய நெல்சன் மண்டேலாவை போல் ஹமாஸ் போராளிகள் தங்கள் மக்களுக்காக போராடி வருகின்றனர்.
அமெரிக்கா எனும் தனிநாடு கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கோ, அச்சுறுத்தலுக்கோ நான் அஞ்ச போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபை எடுக்கும் முடிவுகளைத்தான் நாங்கள் அங்கீகரிப்போம்’ என திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
காசாவின் மீதான இஸ்ரேல் தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனம்’ என அன்வர் சில தினங்களுக்கு முன் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.