ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது பாரிய தாக்குதல்

0
47

காஸா மீதான தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் செயற்பட்டு வரும் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ,நேற்று லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு இஸ்ரேலிய இராணுவத்தினர் பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், ஏவுகணைகள் மூலம் இஸ்ரேலிய நகரமான மெதுலா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.