ஹுங்கமவில் கெப் வண்டி – மோட்டார் சைக்கிள் விபத்து ; ஒருவர் உயிரிழப்பு

0
48

ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு – கதிர்காமம் வீதியில் ருவினிகம சந்திக்கு அருகில் நேற்று சனிக்கிழமை (11) கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் அம்பலாந்தோட்டை நோனாகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய பொலிஸ் சார்ஜன்ட் ஆவார். ரன்ன பகுதியிலிருந்து ஹுங்கம நோக்கி பயணித்த கெப் வண்டியொன்று அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதி பின்னர் தொலைபேசி மின் இணைப்பு கம்பத்தில் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது உயிரிழந்தார். விபத்தின்போது கெப் வண்டியின் சாரதி குடிபோதையில் இருந்ததாக தெரியவந்துள்ளதுடன், அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சடலம் தங்காலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ஹுங்கம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.