அம்பாந்தோட்டையில் ஹுங்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மீனவர் ஒருவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
ஹுங்கம, தெற்கு படஅத்த பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மீனவர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமானது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த கொலை சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹுங்கம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.