ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் ஜனாதிபதி உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம்

0
122

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக சர்வதேச ஊடகங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று இடம்பெற்ற உலங்குவானூர்தி விபத்தில் யாரும் உயிர்பிழைக்கவில்லை என்று ஈரான் அரசு தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் ஒன்று உறுதி செய்த நிலையில் அந்த பகுதியில் செய்யப்பட்ட சோதனையில் விபத்து நடந்த இடத்தில் உலங்குவானூர்தியில் இருந்தவர்கள் உயிருடன் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
உலங்குவானூர்தியில் ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன், ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மற்றும் பிற அதிகாரிகள் மற்றும் பாதுகாவலர்கள் இருந்ததாக அரசு தெரிவித்துள்ளது.