ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் 15 இலக்குகளை தாக்கியதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. கடற்பயண சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக தனது போர்க்கப்பல் விமானங்களை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக அமெரிக்கா
குறிப்பிட்டுள்ளது.
யேமனின் தலைநகரம் சனா உட்பட பல பகுதிகளில் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன. ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஆயுதங்கள் ஏனைய போர் தளபாடங்களை இலக்கு வைத்துள்ளதாகஅமெரிக்கா தெரிவித்துள்ளது.
தலைநகரம் உட்பட பல பகுதிகள் தாக்கப்பட்டதை ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் ஊடகங்களும் உறுதிப்படுத்தியுள்ளன. கடந்த திங்கட்கிழமை அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை யேமன் வான்பரப்பிற்கு மேல் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள்
சுட்டு வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.