ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவில் காடழிப்பில் ஈடுபட்ட இருவர் கைது

0
131

ஹொரவப்பொத்தான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில் அனுமதியின்றி நுழைந்து காடழிப்பில் ஈடுபட்ட இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மோரகேவ பிரதேசத்தை சேர்ந்த 31 மற்றும் 64 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.