ஹொலிவூட்டில் சூட்டிங் முடித்து நாடு திரும்புகிறார் தனுஷ்

0
501

நடிகர் தனுஷ் 2 வாரங்களில் அமெரிக்காவில் இருந்து திரும்ப உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். கடைசியாக அவரது நடிப்பில் கர்ணன் படம் வெளியானது.
மாரி செல்வராஜ் இப்படத்தை இயக்கியிருந்தார். உண்மை சம்பவத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது.
ரசிகர்கள் மத்தியில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் ஜகமே தந்திரம். இந்தப் படம் விரைவில் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது.


இந்நிலையில் நடிகர் தனுஷ் தி கிரேமேன் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் தனுஷ் மனைவி மற்றும் மகன்களுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.
அங்கு படம் தொடர்பான பயிற்சிகளை மேற்கொண்ட தனுஷ், கடந்த மார்ச் மாதம் முதல் படப்பிடிப்பில் பங்கேற்றார். சுமார் 4 மாதங்கள் ஆன நிலையில் நடிகர் தனுஷ் சென்னை திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாலிவுட் படத்தில் 20 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு இருந்த நிலையில் ஒரு மாதம் இதற்காக பயிற்சி மேற்கொண்டார் தனுஷ். தற்போது நிலவும் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடிகர் தனுஷ் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதனால் நான்கு மாதங்கள் அங்கேயே தங்க வேண்டியதானது. இந்நிலையில் இன்னும் 2 வாரங்களில் நடிகர் தனுஷ் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தனது அம்மாவின் கையால் சாப்பிட இனியும் காத்திருக்க முடியாது என்று தனுஷ் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தி கிரே மேன் படம் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகிறது. மார்க் கிரேனேவின நாவலை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்படுகிறது. இப்படத்தில் வேக்னர் மோரா, ஜூலியா பட்டர்ஸ் மற்றும் ஜெஸிக்கா ஹென்விக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.