நாடு தற்போது எதிர்நோக்கும் எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டிற்கு, தன்னிடம் தீர்வு இருப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் உணவு நெருக்கடியில் இருந்து, இலங்கை மக்களை காப்பாற்ற, உணவு வழங்கும் வேலைத் திட்டத்தை தயாரிக்க வேண்டும்.
ஆனால், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம், இது தொடர்பில் தீர்வு திட்டமோ, வேலை திட்டமோ உள்ளதா என்பதை, இன்னும் சில நாட்களில் தெரிந்து கொள்ள முடியும்.
அவரால் அது முடியாது என்று தெரிந்ததும், எனது பணிகளை ஆரம்பிக்க தயாராக இருக்கிறேன்.
என, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.