தல்தென திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்ற 09 கைதிகளில் இருவரை சிறைச்சாலை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
09 இளைஞர்கள் இன்று (17) அதிகாலை சிறையிலிருந்து தப்பிச் சென்றனர்.
எவ்வாறாயினும், அவர்களுள் இரு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் குற்றச்சாட்டின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
ஏனைய 07 பேரைக் கண்டுபிடிப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.