10 கிலோ தங்க பிஸ்கற்களுடன் இருவர் கைது!

0
100

இலங்கைக்குள் 200 மில்லியன் பெறுமதியான 9.5 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகளை கடத்த முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் விமானப் பயணி மற்றும் கட்டுநாயக்க பெண் ஊழியர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் இருந்து EK650 என்ற விமானத்தில் பயணித்த போதே விமான நிலையத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து சுமார் 80 தங்க பிஸ்கட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றியுள்ள நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.