10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ள ஹுக்கும் பாடல்

0
142
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஒகஸ்ட் 10-ஆம் திகதி வெளியான திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜெயிலர்’ திரைப்படத்திற்கு முதலமைச்சர் மு.கஸ்டாலின், கமல்ஹாசன், விஜய் என பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் இப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்தது.இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஹுக்கும்’ பாடல் 10 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை படக்குழு வீடியோவை பகிர்ந்து அறிவித்துள்ளது.