30 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

1000 ரூபா அதிகரிப்பை ஏற்க சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கம் மறுப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளத்தை 1000 ரூபாயாக அதிகரிக்க சம்பள நிர்ணய சபை மேற்கொண்ட தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்கமும் தனியார் தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கமும் அறிவித்துள்ளன.

அண்மையில் கூடிய சம்பள நிர்ணய சபை, இறப்பர் மற்றும் தேயிலை துறைசார்ந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்களது அடிப்படை சம்பளத்தை 900 ரூபாயாகவும் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 100 ரூபாயாகவும் அதிகரிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது.

இந்நிலையில், சம்பள உயர்வு அதிகரிக்கப்படுவதானது, சிறுதோட்ட உற்பத்தியாளர்களையும் தனியார் தேயிலை தொழிற்சாலைகளை நடத்துகின்றவர்களையும் பெரிதும் பாதிக்கும் என்று இந்த சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனவே 1000 ரூபா அதிகரிப்பை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

இதேவேளை சம்பள நிர்ணய சபையின் இந்தத் தீர்மானத்துக்கான ஆட்சேபனையை முன்வைக்கவிருப்பதாக பெருந்தோட்ட நிறுவனங்களது ஒன்றியமும் தெரிவித்துள்ளது.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles