25 C
Colombo
Sunday, November 27, 2022
12,987FansLike
19,993SubscribersSubscribe

10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ள கூகுள்!

பொருளாதார சூழல் காரணமாக செலவுகளைக் குறைப்பதற்காக உலகம் முழுவதும் பல்வேறு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
பிரபல சமூக வலைத்தள நிறுவனமான டுவிட்டர், மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவற்றின் தாய் நிறுவனமான மெட்டா (Meta) நிறுவனத்தில் இருந்தும், 13 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.
இவ்வாறு 2022 ஆம் ஆண்டில் இதுவரை 1,35,000 ஊழியர்கள் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், கூகுள் (Google) நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான Alphabet பல மாதங்களாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யாரையும் உடனடியாக பணியிலிருந்து நீக்கப் போவதில்லை. பணியாளர்களின் செயல் திறன்கள் கண்காணிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டில் 10,000 ஊழியர்கள் வரை பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் நீர்வேலியில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த...

அரச சேவையாளர்களுக்கான இலகு ஆடைத்திட்ட சுற்றறிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு!

அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொரோனா காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்...

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest Articles

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் நீர்வேலியில் கஞ்சா பொதியுடன் ஒருவர் கைது!

பொலிஸ்  விசேட அதிரடிப்படையினரால் கோப்பாய்  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நீர்வேலி கரந்தன் சந்திப்பகுதியில் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பொதியுடன் சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த...

அரச சேவையாளர்களுக்கான இலகு ஆடைத்திட்ட சுற்றறிக்கை குறித்து முக்கிய அறிவிப்பு!

அரச சேவையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இலகுவான ஆடைத்திட்ட சுற்றறிக்கை இரத்துச் செய்யப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.கொரோனா காலத்தில் அரச சேவைகளின் நலன் கருதி, இலகு ஆடைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. எனினும்...

டீசல் தொகையுடன் கொழும்பு வந்த சீனக் கப்பல்!

சீனாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படவுள்ள ஒரு தொகை டீசலுடன் கூடிய ´சூப்பர் ஈஸ்டர்ன்´ எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.மாதிரி பரிசோதனைக்கு பின்னர் 10.6 மில்லியன் லீற்றர் டீசலை இறக்கும்...

கல்முனை பிரதேச தொலைத்தொடர்புநிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிரதேச தொலைத்தொடர்பு நிலைய ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.தொலைத் தொடர்பு நிலையத்தை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்ட இடம்பெற்றது. அரசாங்கத்திற்;கு வருமானத்தை...