நட்டமடைந்து கொண்டிருக்கும் 113 அரச நிறுவனங்களை மறுசீரமைக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
கைத்தொழில் அமைச்சின் நிறுவனங்களின் அதிகாரிகளுடனான சந்திப்பொன்றில் அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
அரசாங்க நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருந்த குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பான ஆரம்ப செயற்பாடுகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.