12 மாடி கட்டிடத்தில் இருந்து விழுந்து ஒருவர் பலி!

0
121

வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாயா மாவத்தை பகுதியில் கட்டிடம் ஒன்றில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த அனர்த்தம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் 12 மாடி கட்டிடம் ஒன்றின் 11வது மாடியை சுத்தம் செய்யும் போது ஜன்னில் இருந்து கீழே விழுந்ததுள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
உயிரிழந்தவர் கிருலப்பனை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
சடலம் களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.