125 கிலோ வெடிமருந்துகளுடன் ஒருவர் கைது!

0
157

நாட்டிற்குள் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட 125 கிலோ அமோனியா நைட்ரேட் வெடிமருந்துகளை கெப் ஒன்றில் ஏற்றிச் சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
தெகடன பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.
தொம்பே, பனன்வல, தெல்கொட பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 500,000 ரூபா பணமும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட ம்மோனியா நைட்ரேட்டின் பெறுமதி சுமார் 18 இலட்சம் ரூபா என தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேக நபர் தொம்பே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.