13வது திருத்தம் நிரந்தர அரசியல் தீர்வல்ல – எம்.கே.சிவாஜிலிங்கம்

0
235

அரசியல் தீர்வு விடயத்தில் 13வது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என இந்தியா அரசாங்கம் தனது நிலைப்பாட்டை எடுக்கக் கூடாது என, தமிழ்த் தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
அரசியல் தீர்வு விடயத்தில் 13வது திருத்தச் சட்டமே இறுதித் தீர்வு என்ற நிலைப்பாட்டை இந்திய அரசாங்கம் எடுக்கக் கூடாது என கோரியுள்ள தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் 51வது அமர்வில் இலங்கை தொடர்பில் தீர்க்கமான முடிவினை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை வலியுறுத்தினார்.